இரண்டாம் நாள் காலை அம்மன் வீதி உலா, இரவு ரிஷப வாகனத்தில் பூச் சக்கரக் குடையுடன். மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில், நான்காம் நாள் காமதேனு வாகனத்தில். ஐந்தாம் நாள் சந்தனக்காப்பு, ஆறாம் நாள் யானை வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.
இரண்டாம் நாள் விழாவின்போது காலை 8 மணிக்கு அம்மன் பட்டுச் சம்பரத்தில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறாள். இரவு ரிஷ வாகனத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பூச் சக்கரக் குடையின் கீழ் அம்மன் ஆரோகணித்து வீதி உலா வருகிறாள்.
மூன்றாம் நாள் விழாவில் ஸ்ரீ அம்பிகை மாரியம்மனுக்கு பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சிம்ம வாகனத்தில் பூச்சரக் குடையின் கீழ் அம்மன் அமர்ந்து வீதி வலம் வருகிறாள்.
நான்காம் நாள் விழாவின்போது பகல் 12 மணிக்கு 108 சங்காபிஷேகமும் மாலை 4 மணி வாக்கில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு காமதேனு வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்ட பூச்சக்கரக் குடையின் கீழ் அம்மன் அமர்ந்து வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி தருகிறாள்.
ஐந்தாம் நாள் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். இரவு பெரிய பூச்சப்பரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருகிறாள்.
ஆறாம் விழாவின்போது பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பட்டு சார்த்தி 2 அபிஷேக ஆராதனையும், 108 சங்காபிஷேகமும் சிறப்புற நடக்கிறது. இரவு யானை வாகனத்தில் அம்பாரி வைத்து அம்மன் வீதி வலம் வருகிறாள்.