About Images

தண்ணீர் பஞ்சம் தீர்த்த கடம்பூர் அம்மன்

கோவில்பட்டில் 'தண்ணீர் தண்ணீர்' படம் எடுக்கப்பட்ட நேரத்தில் தமிழகம் முழுவதும் கடும் பஞ்சம் நிலவியது. இது கடம்பூர் நகரையும் விட்டு வைக்கவில்லை. இது இன்றைக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஆகும்.

கடம்பூர் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் வாடுவதை அறிந்த கடம்பூர் இந்து நாடார் உறவின் முறையினர் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 'போர்' போட்டு தண்ணீர் வசதி செய்யப்பட்டது. அந்த ஒரு குழாயே ஊருக்கு எல்லாம் தண்ணீர் வழங்கியது; வழங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போதும் தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவினாலும் கடம்பூரில் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே கும் இடமில்லை. இதை அம்மனின் அருள், அதிசயம் என்றால் மிகை இல்லை.

கடம்பூர் அம்மனை தரிசித்த காமராஜர்

கடம்பூரில் பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்தது. இதில் அப்போது தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் பங்கேற்றார். மாநாட்டில் பங்கேற்கும் முன் காமராஜர் கடம்பூர் அம்மனை வணங்கிச் சென்றார்.

About Images

Details

Video Icon