கேட்டவரம் தரும் கடம்பூர்மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சித்திரை மாதத்தில் பத்து நாள்கள் சீரும் சிறப்பாக நடைபெறும். இந்த பத்து நாட்களும் ஊரே மின்ஒளி வெள்ளத்தில் கோலாகலமாக காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும்.
திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேர் திருவிழாவாகும். அழகுத் தேரில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறாள். கோவில் நகரமான மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி தேர் பவனிக்காக ரத வீதிகள் அமைக்கப்பட்டு உள்ளது போல் கடம்பூர் மாரியம்மன் கோவில் தேர் சுற்றி வர ரதவீதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தேர் 30 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. தேர் நிலைக்கு வந்து சேர 4 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. பக்தர்கள் விரதம் இருந்துதான் தேரின் வடம் பிடிக்கின்றார். அதுவும் வாலிபர்கள் தான் விரும்பி வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.
வடம் பிடிக்கும் பக்தர்கள் மேல் சட்டை அனிவதில்லை. "ஓம் சக்தி...! ஓம் சக்தி...!" என பக்தி பரவசத்துடன் குரல் எழுப்பியபடி சோர்வின்றி வடம் பிடித்து இழுப்பார்கள்.
வடம் பிடித்து தேரை இழுத்து வரும் வாலிபர்களுக்கு ஊர் பொது மக்கள் ஆங்காங்கே பானக்கரம், போன்றவற்றை மகிழ்கிறார்கள். லட்டு வழங்கி
முதல் நாள் திருவிழாவில் இரவு 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் துவஜாரோகணமும், இரவு 12 மணிக்கு மேல் அம்மன் பட்டுக். சம்பரத்தில் வீதி வலம் வருதலும் நடை பெறுகிறது.
இரண்டாம் நாள் விழாவின்போது காலை 8 மணிக்கு அம்மன் பட்டுச் சம்பரத்தில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறாள். இரவு ரிஷ வாகனத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பூச் சக்கரக் குடையின் கீழ் அம்மன் ஆரோகணித்து வீதி உலா வருகிறாள்.
மூன்றாம் நாள் விழாவில் ஸ்ரீ அம்பிகை மாரியம்மனுக்கு பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சிம்ம வாகனத்தில் பூச்சரக் குடையின் கீழ் அம்மன் அமர்ந்து வீதி வலம் வருகிறாள்.
நான்காம் நாள் விழாவின்போது பகல் 12 மணிக்கு 108 சங்காபிஷேகமும் மாலை 4 மணி வாக்கில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு காமதேனு வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்ட பூச்சக்கரக் குடையின் கீழ் அம்மன் அமர்ந்து வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி தருகிறாள்.
ஐந்தாம் நாள் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். இரவு பெரிய பூச்சப்பரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருகிறாள்.
ஆறாம் விழாவின்போது பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பட்டு சார்த்தி 2 அபிஷேக ஆராதனையும், 108 சங்காபிஷேகமும் சிறப்புற நடக்கிறது. இரவு யானை வாகனத்தில் அம்பாரி வைத்து அம்மன் வீதி வலம் வருகிறாள்.
கடம்பூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 7வது திருநாள் நடக்கிறது.
அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை சாமி ஆடிவருதல் நடைபெறுகிறது. இரண்டு வருடத்திற்கு ஒரு நாள் 'ஊட்டு' என்ற சம்பந்தி போஜனம் நடக்கிறது.
அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் விசாகத் திருநாளன்று சிறப்பு உற்சவமும் அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
அருள்மிகு ஸ்ரீ பெரிய கருப்பசாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் சிவ ராத்திரி திருநாளன்று சிறப்பு பூஜை மிகவும் சிறப்பாக நடக்கிறது.
அருள்மிகு ஸ்ரீ நாராயணசுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை சாமி வீதி உலா வருதலும், அன்னதானமும் நடந்து வருகிறது.
என்.கே.காளியப்பன் நாடார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட 21 தேவதை முன் கருப்பசாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகைத் திருநாளன்று சிறப்பு பூஜை நடத்தப் படுகிறது.